ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  லெவி கட்டணச் சுமை பயனீட்டாளர்களையே சென்றடையும்!

  லெவி கட்டணச் சுமை பயனீட்டாளர்களையே சென்றடையும்!

  10/01/2017

  img img

  கோலாலம்பூர், ஜன.10-: அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை முதலாளிகளைச் செலுத்தச் செய்வதால், கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் காணும் வாய்ப்புள்ளது. இது இறுதியில் பயனீட்டாளர்களுக்கு சுமையாக அமைந்துவிடக்கூடும் என்று மலேசிய கட்டுமானக் கலைஞர் சங்கம் கூறியது.

  அரசாங்கம் அதன் முடிவில் பிடிவாதமாக இருந்தால், இந்தக் கொள்கையின் தாக்கம் பயனீட்டாளர்களைச் சேருவதைத் தவிர்க்க இயலாது என்று அச்சங்கத்தின் தலைவர் ஃபூ செக் லீ தெரிவித்தார்.

  இந்த கொள்கை அமலாக்கத்தினால், உபரி பாகங்களின் விலை அதிகரிக்கலாம். அதன் விளைவு மொத்த கட்டுமானச் செலவினத்தை பாதிக்கலாம், இறுதியில் அந்த செலவினம் பயனீட்டாளர்களைச் சென்றடையும் என்று அவர் விளக்கமளித்தார்.

  அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணம், முதலாளிகளுக்கு பெரும் சுமையாக அமைந்துவிடும். இதன் வழி கட்டுமானத் துறை அதிக செலவினத்தை ஏற்படுத்தும். எனவே, அந்த விலை முடிவில் கட்டடத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.

  முன் அறிவிப்பின்றி அமல்படுத்த இந்தக் கொள்கையினால், கட்டுமானத்துறைக்கு சுமார் 2 பில்லியன் வெள்ளி ஆண்டுதோறும் ஏற்படலாம் என்றும் அவர் சொன்னார்.

  பின்செல்