ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கேமரன்மலை தேர்தல் கொள்கை அறிக்கை கேட்பாரற்றுக் கிடந்த மக்களுக்கான அருமருந்து

  கேமரன்மலை தேர்தல் கொள்கை அறிக்கை கேட்பாரற்றுக் கிடந்த மக்களுக்கான அருமருந்து

  16/04/2018

  img img

  துரைசெல்வன் 

  படங்கள்: ஜனாதிபன் பாலன்

  தானாராத்தா, ஏப். 16: கேட்பாரற்றுக் கிடந்த கேமரன்மலை மக்களுக்கு அருமருந்தாக மைபிபிபியின் தேர்தல் கொள்கை அறிக்கை விளங்குகிறது எனப் புகழாரம் சூட்டப்பட்டது.

  'கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம்' என்ற கொள்கையை முன்வைத்து, வரும் 14ஆவது பொதுத் தேர்தலுக்காக மைபிபிபி 7 அம்ச கொள்கை அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்தக் கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட மைபிபிபி உறுப்பினர்களும் கேமரன்மலை மக்களும் டான்ஶ்ரீ கேவியசின் முயற்சிக்கு தோள் கொடுக்கப்பட்டதாகக் கூறினர்.

  இங்குள்ள புஞ்சாக் அரபெல்லா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியசுடன், மைபிபிபி தேசிய முதன்மை உதவித் தலைவர் டத்தோஶ்ரீ மெக்லின் டென்னிஸ் டி'குருஸ், உதவித் தலைவர்களான டத்தோ இளையப்பன், டத்தோஶ்ரீ காந்தி, ஓங் சீ கெங், தலைமைச் செயலாளர் டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ சேம்சன், டத்தோ சுப்ராயன், ஹெலன் மேனிங், இளைஞர் பகுதித் தலைவர் சத்தியா சுதாகரன் உட்பட கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

   

  பின்செல்