ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: மலேசியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள்

  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: மலேசியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள்

  17/04/2018

  img img

  கோல்ட் கோஸ்ட், ஏப்.16: 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. 

  இதன் மூலம் கோல்ட் கோஸ்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியா 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. அதேவேளையில்  இளைஞர், விளையாட்டு அமைச்சு நிர்ணயித்த ஆறு தங்கப் பதக்க இலக்கையும் மலேசியா தாண்டியுள்ளது.  

  ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் டத்தோ லீ சோங் வெய், உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை எதிர்கொண்டார். இதில் சோங் வெய் 19-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் செட்டில் தோல்வி கண்டாலும், அடுத்த இரண்டு செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோங் வெய் வெற்றி பெற்றுள்ளார். 

  இதன் வழி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற ஆட்டக்காரர் பட்டியலில் சோங் வெய், கூ கின் கீட்டுடன் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதனிடையே மகளிர்க்கான இரட்டையர் பிரிவில் வீவியன் வூ - செளவ் மெய் குவான் இணை, 21-12, 21-12 என்ற புள்ளிகளில் இங்கிலாந்தின் லோரேன் சிமித் - சாரா வால்கர் இணையை வீழ்த்தினார். இது மலேசியாவுக்கு கிடைத்துள்ள ஏழாவது தங்கப் பதக்கமாகும்.

   

  பின்செல்