ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  தொடர் வெற்றியில் லிவர்புல்

  தொடர் வெற்றியில் லிவர்புல்

  16/04/2018

  img img

  லண்டன், ஏப். 15-

  இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண போட்டியில், தொடர்ந்து அதிரடி சாதனைகளைப் படைத்து வரும் லிவர்புல், சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் ஏ.எஃப்.சி போர்னிமோத்தை தோற்கடித்து மீண்டும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

  ஆட்டம் தொடங்கியது முதலே தனது தாக்குதல்களைத் தொடுத்த லிவர்புல், 7ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை சாடியோ மானே மூலம் போட்டு அரங்கை அதிரச் செய்தது. ஆட்டத்தை சமம் செய்ய ஏ.எஃப்.சி போர்னிமோத், எவ்வளவோ போராடிய போதும் அது பலன் இல்லாமல் முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற எண்ணிக்கையில் லிவர்புலுக்கு சாதகமாக முடிந்தது.

  ஆட்டம், சொந்த அரங்கில் நடந்ததால், லிவர்புல் தொடர்ந்து தனது விளையாட்டு வித்தைகளை மைதானத்தில் காட்டத் தொடங்கியது. அதன் பலனாக இரண்டாம் பாதில் ஆட்டத்தில் இரண்டு கோல்களை அது புகுத்தியது.

  69ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை, லிவர்புல் கோல் மன்னன் முஹமட் சாலா போட்ட வேளையில், 90ஆவது நிமிடத்தில் பிர்மின்ஹோ மூன்றவது கோலைப் போட்டு ஆட்டத்தை 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் நிறைவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் லிவர்புல் 3ஆம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

   

  பின்செல்