ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஸ்பெயின் லா லீகாவில் புதிய சாதனையைப் படைத்தது பார்சிலோனா

  ஸ்பெயின் லா லீகாவில் புதிய சாதனையைப் படைத்தது பார்சிலோனா

  16/04/2018

  img img

  மாட்ரிட், ஏப்.16: ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் தொடர்ச்சியாக 39 ஆட்டங்களில் தோல்வியே காணாத அணி என்ற பெருமையை பார்சிலோனா பெற்றுள்ளது. சனிக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 2 - 1 என்ற கோல்களில் வலென்சியாவை வீழ்த்தியது.  

  இதற்கு முன்னர் 1979/80 ஆம் ஆண்டுகளில் ரியல் சொசியடாட் 38 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியே காணாமல் இருந்தது. தற்போது பார்சிலோனா அந்த சாதனையை முறியடித்துள்ளது.  பார்சிலோனாவின் இரண்டு கோல்களை லுவிஸ் சுவாரேஸ், சாமுவேல் உம்தித்தி போட்டனர். 

  வலென்சியாவின் ஒரே கோலை 87 ஆவது நிமிடத்தில் டானி பிரேயோ போட்டார். ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஏ.எஸ் ரோமாவிடம் தோல்வி கண்ட பார்சிலோனாவுக்கு இந்த வெற்றி ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. வலென்சியாவை வீழ்த்தியதன் வழி , பார்சிலோனா 14 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது.

   

  பின்செல்