ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கிழக்குக் கரை ரயில் சேவை பகாங் மாநிலத்தை வளப்படுத்தும்!

  கிழக்குக் கரை ரயில் சேவை பகாங் மாநிலத்தை வளப்படுத்தும்!

  16/04/2018

  img img

  கோலாம்பூர், ஏப்.16:

  கிழக்குக் கரை ரயில் சேவை (இசிஆர்எல்) மக்களை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இதனால், விவசாயத்துறை விருத்தி கண்டு அதிகமான தொழில்முனைவர்கள் உருவாகுவார்கள் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். 

  688 கிலோமீட்டர் தூரத்திலான அந்த பொதுப் போக்குவரத்து இணைப்பில் பகாங் மாநிலத்தில் உள்ள 64,000 மக்கள் பயனடைவார்கள். 

  இசிஆர்எல் ரயில் திட்டம் பகாங் மாநிலத்தின் பெந்தோங், தெமெர்லோ, மாரான், கம்பாங், கோத்தா சுல்தான் அகமட் ஷா, குவாந்தான் துறைமுகம் 1, 2 உட்பட செராத்திங் ஆகிய இடங்களை இணைக்கவுள்ளது. 

  இதனால், பகாங் மாநிலம் உயிர்த்தெழவுள்ளது. அதோடு தென்கிழக்காசிய வரலாற்றிலேயே மிக நீண்ட சுரங்கப்பாதையையும் காணவிருக்கின்றது என்றார் அவர். 

  நேற்று மெனாரா ஃபெல்டாவில் நடைபெற்ற தலைநகரில் வசிக்கும் பகாங் மண்ணின் மைந்தர்களுக்கான நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். 

  இந்த நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்ட பகாங் மக்கள் கலந்து கொண்டனர். பகாங் மண்ணின் மைந்தர் என்ற முறையில் டான்ஶ்ரீ கேவியசும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

   

  பின்செல்