ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அன்வார், மகாதீர் ஒத்துழைப்பு அம்னோவிற்கு எவ்வித அச்சமும் இல்லை

  அன்வார், மகாதீர் ஒத்துழைப்பு அம்னோவிற்கு எவ்வித அச்சமும் இல்லை

  16/04/2018

  img img

  குளுவாங், ஏப். 16: பிகேஆர் கட்சியின் பொதுத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆகிய இருவரின் ஒத்துழைப்பு அம்னோவிற்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக அமையவில்லை என அம்னோ உதவி தலைவர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.

  இவ்விருவரின் கைகோர்ப்பால் அம்னோ கதிகலங்கிப் போயிருப்பதாக கூறப்படுவது பொய்யான ஒரு கூற்று மட்டுமல்ல, வேடிக்கையாகவும் இருக்கிறது. இவர்களின் ஒத்துழைப்பு தோல்வியடைந்த ஒன்று என்பது கடந்த காலத்தில் அம்னோவில் இவர்கள் ஒன்றாக பணியாற்றியபோதே நிரூபணமான ஒன்று என தற்காப்புத் துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் குறிப்பிட்டார். 

  அம்னோவின் தலைவர், துணைத் தலைவராகவும், நாட்டின் பிரதமர், துணைப் பிரதமராகவும் இருந்த காலத்தில் இவர்களால் ஒத்துழைத்து செயல்பட முடியவில்லை. இவ்விருவரின் ஒத்துழைப்பு ஏற்கெனவே சோதிக்கப்பட்டுவிட்டது. இதில் சோதிக்கப்படாத இதர எதிர்க்கட்சிகளுடனான ஒத்துழைப்பும் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒத்துழைப்பு அம்னோவிற்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக இல்லை. 

  ஜோகூர் ஃபெல்கரா குடியிருப்பாளர்களுடனான நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் மேற்கண்டவாறு பேசினார். 

   

  பின்செல்