ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  விழுதுகள், 360 பாகை சித்திரை சந்திப்பு

  விழுதுகள், 360 பாகை சித்திரை சந்திப்பு

  16/04/2018

  img img

  வசந்தத்தை அள்ளித்தரும் தமிழ் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. புது வருடம் அன்று இறைவழிபாடு, விருந்தோம்பல், ஆசி பெறுதல் என்பனவற்றை நாம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.

  சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனிற்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. ஆகவே, ஆஸ்ட்ரோவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் “விழுதுகள் மற்றும் 360 பாகை சித்திரை சந்திப்பு” நிகழ்ச்சி அமையவிருக்கிறது.

  மக்களுடன் இணைந்து ஒரே குடும்பமாய்  பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் சமூக விழாவானது வருகின்ற 21 ஏப்ரல் 2018, காலை 8.00 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை கிள்ளானில் அமைந்துள்ள தேசிய வகை பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியில் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது. 

  மருத்துவ முகாம், சிறுவர்களுக்கான விளையாட்டு, வர்ணம் தீட்டும் போட்டி, உள்ளூர் கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்தல், பகுதி நேர தொழில் பட்டறை, புற்று நோய் பற்றிய பட்டறை, டாக்டர் சுகி சிவத்தின் உரை மற்றும் அதிஷ்டக் குலுக்கல் என பல நிகழ்ச்சிகள் உங்களை மகிழ்விக்க காத்துக் கொண்டிருக்கிறது.     

  ஆகவே, வசந்தத்தை அள்ளித்தரும் இப்புத்தாண்டை உங்கள் குடும்பத்துடன்  சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ “விழுதுகள் மற்றும் 360 பாகை சித்திரை சந்திப்பு” நிகழ்ச்சியுடன் இணைய மறவாதீர்கள். 

   

  பின்செல்