ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  30 நாளில் உடல் கொழுப்பை குறைத்தால் கார் பரிசாக வழங்கப்படும்

  30 நாளில் உடல் கொழுப்பை குறைத்தால் கார் பரிசாக வழங்கப்படும்

  16/04/2018

  img img

  கோலாலம்பூர், ஏப். 16:

  நெஸ்லே ஒமேகா பிளஸ் நிறுவனம் மலேசியர்கள் தங்களது உடல்களிலுள்ள கொழுப்புகளைக் குறைப்பதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

  ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் நடைபெறவிருக்கும் இந்த பிரச்சாரத்தில் 30 நாளில் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் எனும் இந்த பிரச்சாரம் நடைபெறவுள்ளது. தேசிய இருதய சிகிச்சை கழகம் (ஐ.ஜே.என்), அலையன்ஸ் காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவில் நடைபெறவிருக்கும் இந்தப் பிரச்சாரத்தில் மலேசியர்கள் தங்களது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அதற்கான வாழ்க்கை முறையை அவர்கள் மேற்கொள்வதற்கு இந்த பிரச்சாரத்தில் வலியுறுத்தப்படும்.

  மலேசிய நெஸ்லே நிறுவனத்தின் வர்த்தக நிர்வாக அதிகாரி இங் சூ யென் கூறுகையில், மலேசியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கும் வகையில் அவர்களுக்கு போதிய உடல் ஆரோக்கிய கல்வியையும் விழிப்புணர்வையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  மலேசியர்கள் உடலில் கொழுப்பைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை வழங்குவதோடு ஆரோக்கியமான உணவு கட்டுப்பாட்டையும் அவர்கள் மேற்கொள்வது குறித்து இந்த பிரச்சாரத்தில் தெரிவிக்கப்படும் என இந்த பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய போது அவர் கூறினார்.

  இதற்கு முன்னர் நாங்கள் மேற்கொண்டிருந்த 30 நாளில் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் என்ற பிரச்சாரத்தில் கிடைக்கப்பட்ட வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் இந்த ஆண்டும் அதனைத் தொடர முடிவெடுத்துள்ளோம். இந்த ஆண்டு எங்களின் இந்த பிரச்சாரத்திற்கு ஐ.ஜே.என்னும் அலையன்ஸ் நிறுவனமும் ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இ சூ யென் கூறினார்.

  இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜே.என் குழுமத்தின் நடவடிக்கை பிரிவின் தலைவர் அக்மால் அரிப் முஹம்மட் பாவ்சி கூறுகையில், இந்த வட்டாரத்தில் தலைசிறந்த இருதய சிகிச்சை கழகமாக திகழும் ஐ.ஜே.என். மக்களுக்கு இருதய ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு வற்றாத ஆதரவை வழங்கி வருவதாகவும் இம்முறை நெஸ்லே நிறுவனத்துடனும் அலையன்ஸ் காப்புறுதி நிறுவனத்துடனும் இணைந்து இந்த பிரச்சார நிகழ்ச்சியில் பங்கு கொள்வது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

  34 வயதில் நெஞ்சு வலி ஏற்பட்டு நெஸ்லே ஒமேகா பிளஸ்சின் 30 நாள் சவால் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஆரோக்கியமடைந்த பிரபல வானொலி அறிவிப்பாளர் ஷாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

  நெஸ்லே ஒமேகா பிளஸ்சின் இந்த 30 நாள் சவால் எனும் பிரச்சார நிகழ்ச்சி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் நாடு தழுவிய நிலையில் நடைபெறவுள்ளது. இதில், பங்கெடுப்பவர்கள் எவ்வளவு அதிகமாக கொழுப்புகளை தங்களின் உடல்களில் குறைக்கின்றார்கள் என்பதனை கருத்தில் கொண்டு அதன் வாயிலாக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  இதில் முதல் நிலையில் வெற்றி பெறுபவர்களுக்கு புதிய காரும் அலையன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் 80 ஆயிரம் மதிப்புடைய வாழ்நாள் காப்புறுதியும் வழங்கப்படும். இதைத் தவிர்த்து, ஆரோக்கியமான இருதய மாற்றத்தை பங்கேற்பாளர்களில் ஒவ்வொரு மாதமும் 3 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  இந்த சவாலில் பங்குகொள்ள நினைப்பவர்கள் நாடு தழுவிய நிலையில் உள்ள பேரங்காடிகளில் நெஸ்லே ஒமேகா பிளஸ்சின் நடமாடும் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது உடலிலுள்ள கொழுப்பின் அளவை பரிசோதித்துக்கொள்ளலாம்.

  மேல்விவரங்களுக்கு http://myhealthyheart.com.my அகப்பக்கத்திலும் முகநூலில் நெஸ்லே ஒமேகா பிளஸ்சின் பக்கத்தையும் நாடலாம்.

   

  பின்செல்