ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  தேமுவின் ஆட்சி தொடர்ந்தால் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராது!

  தேமுவின் ஆட்சி தொடர்ந்தால் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராது!

  16/04/2018

  img img

  பாடங் தெராப், ஏப். 16: மலேசியாவில் தேசிய முன்னணியின் ஆட்சி தொடரப்பட்டால் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தப்படாது என உள்நாட்டு வணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார். 

  அரிசி, சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, மாவு, சீனி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும். பல்லின மக்களின் அன்றாடத் தேவைகளில் அடிப்படையானதாக இருக்கும் இப்பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என்று ஃபெல்டா லுபோக் மெர்பாவ் மக்களுடனான விருந்து நிகழ்வை தொடக்கி வைத்த பின்னர் அவர் சொன்னார். 

  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்படும் என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை மறுத்த டத்தோஶ்ரீ ஹம்ஸா மேற்குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதியை வழங்கினார்.

  இதனிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நாடு தழுவிய நிலையில் தமது அமைச்சின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட செந்துஹான் ரக்யாட் விற்பனை திட்டத்தின் வழி 4 மில்லியன் மக்கள் பயன் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  

  இத்திட்டத்தின் கீழ் மக்களுக்குத் தேவையான சுமார் 27 பொருட்கள், சந்தை விலையைக் காட்டிலும் மிகவும் மலிவாக விற்கப்பட்டது. இத்திட்டமானது கடந்த ஈராண்டுக்கு முன்னரே வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். எனவே, 14ஆவது தேர்தலுக்காக செயல்படுத்தப்பட்ட ஒன்றாக கருத வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். 

   

  பின்செல்