ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டு கொலை

  எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டு கொலை

  16/04/2018

  img img

  கராச்சி, ஏப்.14:

  பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா பகுதியில் கச்சேரி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அதில் பாடகி சமீனா சமோன் (24) என்பவர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார்.

  அப்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த தரிக் அகமது ஜடோய் என்பவர், சமோனை எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார். தான் கர்ப்பிணி என்பதால், நின்று கொண்டு பாட முடியாது என அவர் மறுத்துள்ளார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த தரிக் அகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். இதில் குண்டுகள் துளைத்து சமோன் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

  அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சமோன் இறந்து விட்டதாக கூறினர்.

  இதுகுறித்து சமோனின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தரிக் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கச்சேரியில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

   

  பின்செல்