ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  இலங்கையில் 16 மந்திரிகள் அதிரடி நீக்கம்

  இலங்கையில் 16 மந்திரிகள் அதிரடி நீக்கம்

  16/04/2018

  img img

  கொழும்பு, ஏப்.14:

  இலங்கையில் அதிபர் மைத்திரிய சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய ஐக்கிய அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது.

  அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வலியுறுத்தப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே கடந்த 4ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்.

  அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள், மற்றும் எம்.பி.க்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்தனர். இருந்தும் அவர் தனது கட்சி, சிறுபான்மை கட்சிகளின் எம்.பி.க்களின் வாக்குகளைப் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வி அடைய செய்தார்.

  இதையடுத்து கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சரவையை மாற்றியமைக்க அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும் முடிவு செய்தனர். அப்போது ரணில் விக்ர மசிங்கே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 16 மந்திரிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

  அவர்களில் 6 பேர் கேபினட் அந்தஸ்து மந்திரிகள் 10 பேர் இணை, துணை மந்திரிகள் ஆவர். இவர்கள் அனைவரும் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள். அதிபர் சிறிசேனாவின் தலைமையின் கீழ் செயல்படப் போவதாகவும், ராஜபக்சேவை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். 

   

  பின்செல்