ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  இளவரசர் ஹரி திருமணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்

  இளவரசர் ஹரி திருமணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்

  12/04/2018

  img img

  லண்டன், ஏப்.13 இளவரசர்  ஹரி - மெர்க்கல் திருமணத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதிரடி நடவடிக்கைகளையும்  மேற்கொள்ள நாங்கள் தயார் என்று பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்தனர். 

  பல்லாயிரக்கணக்கான மக்கள் இளவரசரின் திருமணத்தைக் காணக்கூடும் இடத்தில் அவர்களில் யார் வேண்டுமானாலும் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம். அல்லது ராஜகுடும்பத்தின் தீவிர வெறியராக இருக்கலாம்? 

  மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பும் ஒரு நபராகவும் இருக்கலாம் என்று  முன்னாள் போலீஸ் அதிகாரியான பாப் புரேட் ஹஸ்ட் கூறுகிறார். 

  கடந்த 2011ஆம் ஆண்டு இளவரசர் வில்லியத்தின் திருமணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

  இளவரசர் ஹரியும் மெர்க்கலும் மே மாதம் 19ஆம்  தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள். திருமணம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். அந்த நேரத்தில் ஒரு விழா  மகிழ்ச்சி நிலையிலிருந்து ஏமாற்றமடையச் செய்யக் கூடாது. அதனால் முடிந்த வரை அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாதபடி கவனமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். 

  அதற்கு மேல் திருமணம் முடிந்ததும் திறந்த வாகனத்தில் புதுமணத் தம்பதியர் பவனி வர உள்ளனர். அதுதான் மிகப் பாதுகாப்புக்குரிய நேரம். இளவரசரே அந்த அளவுக்கு பிரச்சினைகளை எதிர்நோக்கும்  போது போலீசார் நாங்களும் அதிக பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனப்  போலீஸ் அதிகாரியான பாப் புரேட்ஹஸ்ட்  தெரிவித்துள்ளார்.

   

  பின்செல்