ஃப்ளாஷ் நியூஸ்

    nwsId

    மரணத்துக்கு பின்னரும் நாம் வாழ முடியும்! நினைவுகளை பதிவிறக்கம் செய்ய முயற்சி!

    மரணத்துக்கு பின்னரும் நாம் வாழ முடியும்!  நினைவுகளை பதிவிறக்கம் செய்ய முயற்சி!

    12/04/2018

    img img

    லண்டன், ஏப்.13:

    இறந்த பின் உயிர் வாழ்வது தார்மீக ரீதியில் முரணாக தெரிந்தாலும் அறிவியல் மூலம் இந்த முரண்பாட்டை தகர்த்து நம்மால் இறந்த பின்னரும் உயிர் வாழ முடியும் என்று தெரிவித்துள்ளனர் அறிவியலாளர்கள்.

    நிஜத்தில் மரணத்தை வெல்ல மனிதனால் முடியுமா? எனும் சந்தேகம் சரியானது தான். ஆகவே நம்  உடலை நாம் நிச்சயமாக அழியாமல் காக்க முடியாது. ஆனால் நம் நினைவுகளை மட்டும் 'பதிவிறக்கம்' செய்து கொண்டு இறந்தவுடன் அந்த ஞாபகங்களை வேறொரு ஆரோக்கியமான உடலுக்கு பதிவேற்றம் செய்து விட்டால் என்ன? 

    இப்போது கிட்டத்தட்ட அதே திட்டத்துடன் தன்னால் அதை செய்ய முடியும் என 'நெக்டோம்' எனும் ஒரு  நிறுவனம் களத்தில் குதித்துள்ளது.இதை அவர்கள் 'மைன் ஆப் லோடிங் சர்வீஸ்' என்கிறார்கள். ஆனால் இது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. மனதளவிலும் உடல் அளவிலும் பல்வேறு வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். 

    இவர்களின் இத்திட்டத்தை இப்படி விளக்குகிறார்கள்: இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரின் மூளையை மட்டும் பதப்படுத்தவேண்டும். அதற்காக அவரின் இரத்தக் குழாய்களில் எம்பாமிங் ரசாயனம் செலுத்தப்படும். 

    இதை செய்யும் போது அவரின் உயிர் பிரிந்து விடும். அதன் பின் பதப்படுத்தப்பட்ட மூளையை 'மேப்பிங்' செய்வார்கள். அதாவது மூளையின் நரம்புகள் ஒவ்வொன்றும் எவ்வாறெல்லாம் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.  நியூரான்கள் எனப்படும் நரம்பணுக்கள் எவ்வாறெல்லாம் தொடர்பில் இருக்கின்றன என்பது போன்ற தகவல்கள் அப்படியே பிரதி எடுக்கப்படும்.

    இப்படி மூளையின் கடினமான குழப்பம் ஏற்படுத்தும் தொடர்புகளின் மேப்பை 'கொணக்ட்டோம்' என்று அழைக்கிறார்கள். இதை வைத்து எதிர்காலத்தில் தங்களால்  இறந்தவர்களின் நினைவுகளை மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள். 

    இவர்களை எப்படி நம்புவது? இந்தக் கேள்விக்கு பதிலாக தங்கள் நிறுவனத்தின் விருது பெற்ற சாதனை ஒன்றை முன் வைக்கின்றனர். அதில்  பன்றியின் மூளையை இதே போல பதப்படுத்தி அதன் 'கொணக்ட்டோம்மை' வெற்றிகரமாகப் பிரதி எடுத்துள்ளனர். 

    ஆனால், இந்தச் செய்திகள் வெளியானதும் நெக்டோம் நிறுவனத்துக்கு எந்த அளவுக்கு விளம்பரமும் புகழும் கிடைத்ததோ அதே அளவுக்கு எதிர்ப்பும் பிரச்சினைகளும் வந்துள்ளன.

     

    பின்செல்