ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சாம்பியன்ஸ் லீக்: பேசலை பந்தாடியது மென்செஸ்டர் சிட்டி !

  சாம்பியன்ஸ் லீக்: பேசலை பந்தாடியது மென்செஸ்டர் சிட்டி !

  14/02/2018

  img img

  பேசல், பிப்.15: சாம்பியன்ஸ் லீக் எனப்படும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டி 4 - 0 என்ற கோல்களில் சுவிட்சர்லாந்தின் எப்.சி பேசல் அணியை வீழ்த்தியது.

  இரண்டாம் கட்ட ஆட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள வேளையில் முதல் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டிக்கு கிடைத்துள்ள வெற்றி, கிட்டத் தட்ட காலிறுதி ஆட்டத்துக்கான வாய்ப்பை உறுதிச் செய்துள்ளது. ஜாக்கோப் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி முதல் 23 நிமிடங்களில் 3 கோல்களைப் போட்டு அதிரடி படைத்தது.

  9 ஆவது நிமிடத்தில் இல்கி குன்டோகன் முதல் கோலைப் போட்ட வேளையில் 18 ஆவது நிமிடத்தில்  பெர்னார்ட்டோ சில்வா கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். 23 ஆவது நிமிடத்தில் செர்ஜியோ அகுவேரோ  மூன்றாவது கோலைப் புகுத்தினார். இரண்டாம் பாதியில் இல்கி குன்டோகன் மீண்டும் போட்ட கோல், மென்செஸ்டர் சிட்டியின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது.

   

  இந்த பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்லக்கூடிய முக்கிய அணிகளில் ஒன்றாக மென்செஸ்டர் சிட்டி விளங்குகிறது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டி, அரையிறுதி ஆட்டம் வரை தேர்வு பெறும் என கால்பந்து விமர்சகர்கள் கருதுகின்றனர்.

  பின்செல்