ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்துக்கு திரும்புவேன்

  ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்துக்கு திரும்புவேன்

  14/02/2018

  img img

  ரோட்டர்டாம், பிப்.15: அனைத்துலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 இடத்துக்கு மீண்டும் வருவேன் என்று சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் நம்பிக்கை தெரிவித்தார்.

  ஏடிபி ரோட்டர்டம் பொது டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறும் பட்சத்தில் அண்மையில் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் வெற்றியாளர் பட்டம் வென்ற ஃபெடரர் மீண்டும் முதல் இடத்துக்கு வர முடியும்.

  அவ்வாறு அவர் மீண்டும் முதலிடத்துக்கு வரும் பட்சத்தில், அதிக வயதில் (36) தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்ற பெருமை அவருக்குச் சேரும்.

  இந்நிலையில், நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

  இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் தரவரிசையில் முதலிடத்துக்கு வருவேன். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தெரியும். இருப்பினும் முயற்சி செய்வேன். ஆஸ்திரேலியன் பொது டென்னிஸ் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அந்தத் தொடரில் நம்பர் 1 இடத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் விளையாடவில்லை. டென்னிஸ் மீது தீராக் காதல் கொண்டிருக்கிறேன். ரோட்டர்டம் பொது டென்னிஸ் போட்டியில் விளையாட ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்றார் ஃபெடரர்.

   

  இந்த ஓபனில் முதல் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் ரூபென் பெமல்பன்ஸை ஃபெடரர் எதிர்கொள்கிறார்.

  பின்செல்