ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சாம்பியன்ஸ் லீக்: யுவன்டஸ், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் சமநிலை!

  சாம்பியன்ஸ் லீக்: யுவன்டஸ், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் சமநிலை!

  14/02/2018

  img img

  துரின், பிப்.15: ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றின் முதல் ஆட்டத்தில் இத்தாலியின் யுவன்டஸ் 2 -  2 என்ற கோல்களில் இங்கிலாந்தின் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருடன் சமநிலை கண்டுள்ளது.

  இந்த சமநிலை முடிவு, யுவன்டஸ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதல் 10 நிமிடங்களில் 2 கோல்களில் முன்னணி வகித்த யுவன்டஸ் இறுதியில் 2 - 2 என்ற கோல்களில் சமநிலைக் கண்டுள்ளது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் யுவன்டசின் முதல் கோலை கன்சாலோ ஹிகுவாய்ன் போட்டார்.

  9 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டியின் மூலம், ஹிகுவாய்ன் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். எனினும் 35 ஆவது நிமிடத்தில் ஹாரி கேன், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் முதல் கோலைப் புகுத்தினார். முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தறுவாயில் யுவன்டஸ் அணிக்கு மீண்டும் பினால்டி கிடைத்தது.

  எனினும் அந்த பினால்டியை ஹிகுவாய்ன் நழுவ விட்டார். இரண்டாம் பாதி ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் போட்ட பினால்டி கோல், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருக்கு சமநிலை முடிவைத் தந்துள்ளது.

   

   

   

  பின்செல்