ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  108 சிவலிங்கங்களை மணல் சிற்பங்களாக வடித்த சுதர்சன் பட்நாயக்

  108 சிவலிங்கங்களை மணல் சிற்பங்களாக வடித்த சுதர்சன் பட்நாயக்

  14/02/2018

  img img

  புவனேஷ்வர், பிப்.15:

  மகா சிவராத்திரி தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 108 சிவலிங்கங்களை வடிவமைத்துள்ளார்.

  மணலில் 5 அடி சிவன் பெருமான் சிலையை செய்து அதனைச் சுற்றி 2 அடி உயர 108 சிவலிங்கங்களை எட்டு மணி நேரத்தில் வடித்துள்ளார். அவருடைய மணல் சிற்ப பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுதர்சனுக்கு உதவி செய்தனர். உலக அமைதியை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த சிற்பங்களை வடித்துள்ளார்  சுதர்சன்.

  இது குறித்து பேசிய சுதர்சன், 'மகா சிவராத்திரியன்று பல பக்தர்கள் பூரி நகருக்கு வருகை தருவர். இந்நாளன்று உலக அமைதிக்காக சிவனிடம் வேண்டிக்கொள்கிறேன்' என கூறினார்.

   

  சுதர்சன் பட்நாயக், பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து மணல் சிற்பங்கள் மூலம் மக்களிடையே  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். அவரின் மணல் சிற்பங்கள் பார்வையாளர் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

  பின்செல்