ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  தெலுக் இந்தானில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

  தெலுக் இந்தானில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

  13/02/2018

  img img

  மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டையொட்டி தெலுக் இந்தானில் மாபெரும் எம்ஜிஆர் கலை விழா வரும் 17.2.2018 சனிக்கிழமை இரவு 7.00 மணி தொடக்கம் ஜாலான் பாடாங் தேம்பாக் சொங் மிங் சீனப் பள்ளி மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக தெலுக் இந்தான் எம்ஜிஆர் ரசிகர் மன்ற ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

  இந்த விழாவில் நாடறிந்த பல நல்ல பாடகர்களும் கலைஞர்களும் நடனக்குழுவினரும் நகைச்சுவை கலைஞர்களும் கலந்து கொள்வார்கள். நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். சிறப்பு வருகையாளராக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தோட்ட மூலத் தொழில் துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ மா சியூவ் கியோங்கும் சங்காட் ஜோங் சட்ட மன்ற உறுப்பினர் அஸ்ஹர் ஜமாலுடினும் கலந்து சிறப்பிக்க விருக்கின்றனர்.

  பின்செல்