ஊழல் புகார் வழங்கியவர்களுக்கு வெகுமதி!

ஊழல் புகார் வழங்கியவர்களுக்கு வெகுமதி!

13/02/2018

img img

கோலாலம்பூர், பிப்.14:

லஞ்ச நடவடிக்கைகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் செய்த 267 அரசு ஊழியர்களுக்கு 400,000 வெள்ளி வெகுமதி பகிர்ந்தளிக்கப்படுவதாக அவ்வாணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஸுல்கிப்லி அகமட் தெரிவித்தார்.

தங்களைச் சுற்றி நடக்கும் லஞ்ச நடவடிக்கைகளை புகார் செய்த அவர்களுக்கு இந்த வெகுமதி வழங்கப்படுகின்றது. எம்ஏசிசி தனித்து இயங்க முடியாது. லஞ்சத்தை எதிர்க்கும் அதன் பயணத்தில் பிற தரப்பினரும் இணைய வேண்டும்.

ஆகையால், அரசு ஊழியர்கள் எம்ஏசிசியின் உளவாளிகளாக செயல்பட வேண்டும். ஊழல் எதிர்க்கும் போராட்டத்திற்கு கை கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

நேற்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த அவர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

பின்செல்