ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  வகுப்பறையில் கைபேசி பயன்பாடு: கல்வி அமைச்சில் வழிகாட்டி ஏதுமில்லை

  வகுப்பறையில் கைபேசி பயன்பாடு: கல்வி அமைச்சில் வழிகாட்டி ஏதுமில்லை

  13/02/2018

  img img

  சிரம்பான், பிப்.14:

  ஆசிரியர்கள் வகுப்பறையில் கைபேசியைப் பயன்படுத்த தடை விதிக்கும் வழிகாட்டி ஏதும் கல்வி அமைச்சில் இல்லை என கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ சோங் சின் வூன் தெரிவித்தார்.

  ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வகுப்பறையில் கைபேசியைப் பயன்படுத்தலாம்.

  ஆசிரியர்கள் வகுப்பறையில் கைபேசியைப் பயன்படுத்தலாமா இல்லையா என்பதற்கெல்லாம் இதுவரை கல்வி அமைச்சில் வழிகாட்டிஏதும் தயார் செய்யப்படவில்லை.

  எப்போது கைபேசியை பயன்படுத்த வேண்டும் என்பதை நிச்சயம்  ஆசிரியர்கள் அறிவார்கள் என்று நேற்று உலு தெமியாங்கில் கொண்டாடப்பட்ட சீனப்பெருநாள் முன்னோட்ட நிகழ்வில் பேசிய அவர் சொன்னார்.

  மேலும் ஆசிரியர்கள் அவசர நேரங்களில் கைபேசியைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

  பின்செல்