ஊழல் குற்றச்செயலில் பொதுத் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஊழல் குற்றச்செயலில் பொதுத் துறை ஊழியர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு!

13/02/2018

img img

புக்கிட் மெர்தாஜம், பிப். 14: கடந்த சில வருடங்களாக ஊழல் விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இம்மாநில பொதுத் துறை ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 300 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணைய இயக்குனர் டத்தோ அப்துல் அஸிஸ் அபான் தெரிவித்தார்.

எனினும் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையின் புள்ளி விவரத்தை அவர் வெளியிடவில்லை. கடந்தாண்டு பொது ஊழியர்கள் வழங்கிய தகவலின் கீழ் 10 கைது நடவடிக்கை தமது தரப்பு மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

"இம்மாநில பொதுத் துறை ஊழியர்களிடையே ஊழலை தவிர்க்கும் கலாச்சாரமும் ஊழல் தொடர்பான தகவல் பரிமாற்றமும் பின்பற்றப்பட்டால் இக்குற்றச் செயலுக்காக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதோடு, பொதுத் துறை ஊழியர்கள் மத்தியில் ஊழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செபராங் பிறை நகராட்சி மன்ற ஏற்பாட்டில் இங்கு நடைபெற்ற ஊழல் தடுப்பு நடவடிக்கை பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டத்தோ அப்துல் அஸிஸ் அபான் மேற்கண்டவாறு பேசினார்.

 

 

பின்செல்