ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கத்தார் பொது டென்னிசின் முதல் சுற்றில் மரியா ஷரபோவா தோல்வி

  கத்தார் பொது டென்னிசின் முதல் சுற்றில் மரியா ஷரபோவா தோல்வி

  13/02/2018

  img img

  தோஹா, பிப்.14:

  கத்தார் பொது டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவிடம் ரஷ்யாவின் மரியா ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.

  கத்தார் பொது டென்னிஸ் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும், ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவும் மோதினர்.

  ஆட்டத்தின் முதலில் இருந்தே ஷரபோவா சிறப்பாக விளையாடினார். இதனால் முதல் சுற்றில் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  இதையடுத்து, இரண்டாம் சுற்றில் மோனிகா நிகுலெஸ்கு அற்புதமாக விளையாடி ஷரபோவாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இதனால் இரண்டாவது சுற்றை மோனிகா 4-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். 

  ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்று நடந்தது. இதிலும் ரொமானியா வீராங்கனை சிறப்பாக விளையாடினார். இதனால் 3-6 என்ற கணக்கில் முன்றாவது சுற்றையும் கைப்பற்றினார். இறுதியில், மோனிகா நிகுலெஸ்கு 4-6 6-4 6-3 என்ற கணக்கில் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார்.

  இவர்கள் இருவருக்கும் இடையே 2 மணி நேரம் 38 நிமிடங்கள் இந்தப் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  பின்செல்