ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஸ்பீடு ஸ்கேட்டிங்: நெதர்லாந்துக்கு தங்கம், வெண்கலம்

  ஸ்பீடு ஸ்கேட்டிங்: நெதர்லாந்துக்கு தங்கம், வெண்கலம்

  13/02/2018

  img img

  பியோங்சாங், பிப்.14:

  மகளிருக்கான 1500 மீ ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் நெதர்லாந்து முதல் மற்றும்

  3-ஆம் இடத்தைப் பிடித்தது. அந்நாட்டின் ஐரீன் வஸ்ட் பந்தய இலக்கை 1 நிமிடம் 54.35 விநாடிகளில் எட்டி தங்கம் வெல்ல, மரிட் லீன்ஸ்ட்ரா 1 நிமிடம் 55.26 விநாடிகளில் வந்து வெண்கலம் வென்றார். ஜப்பானின் மிஹோ டகாகி 1 நிமிடம் 54.55 விநாடிகளில் வந்து வெள்ளி வென்றார். இதில், ஐரீன் வஸ்ட் மகளிருக்கான 3000 மீ ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  இதனிடையே ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் போட்டியில் கனடாவின் மிக்கெல் கிங்ஸ்பரி 86.63 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மாட் கிரஹாம் 82.57 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜப்பானின் டாய்சி ஹரா 82.19 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். ஜப்பானுக்கு இந்தப் போட்டியில் இது முதல் பதக்கமாகும்.

  ஸ்னோபோர்டு: வீராங்கனைகள் காயம்

  மற்றொரு நிலவரத்தில்,  ஸ்னோபோர்டு போட்டியில் மகளிருக்கான ஸ்லோப்ஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்று, பலமான காற்று காரணமாக சுமார் ஒருமணி நேரம் தாமதமாக நடத்தப்பட்டது. எனினும், போட்டிக்கு இடையே வீசிய பலமான காற்று காரணமாக வீராங்கனைகள் சிலர் காயமடைந்தனர்.

  இந்தத் தடைகளைக் கடந்து, நடப்புச் சாம்பியனான அமெரிக்காவின் ஜேமி ஆன்டர்சன் 83 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தக்கவைத்துக் கொண்டார். கனடாவின் லெüரி புளோவின் 76.33 புள்ளிகளுடன் வெள்ளியும், ஃபின்லாந்தின் என்னி ருகாஜார்வி 75.38 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

  பின்செல்