ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பிரீமியர் லீக்: ஹசார்ட்டின் இரண்டு கோல்களில் வெற்றி பெற்ற செல்சி

  பிரீமியர் லீக்: ஹசார்ட்டின் இரண்டு கோல்களில் வெற்றி பெற்ற செல்சி

  13/02/2018

  img img

  லண்டன், பிப்.14: இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான செல்சி 3 - 0 என்ற கோல்களில் வெஸ்ட் புரோம்விச் அல்பியோன் அணியை வீழ்த்தியது.

  இந்த ஆட்டத்தில் செல்சியின்  முன்னணி நட்சத்திரம் எடின் ஹசார்ட் இரண்டு கோல்களைப் போட்டு அசத்தியுள்ளார். கடந்த இரண்டு பிரீமியர் லீக் ஆட்டங்களில் போர்னிமோத், வோட்போர்ட் கிளப்புகளிடம் தோல்வி கண்ட, செல்சி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

  இந்த வெற்றியின் மூலம் செல்சி மீண்டும் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மென்செஸ்டர் யுனைடெட்டுடனான புள்ளி வேறுபாட்டை ஐந்தாக குறைத்துக் கொண்டுள்ளது. முதல் பாதி ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் எடின் ஹசார்ட் முதல் கோலைப் புகுத்தினார்.

  அந்த கோலானது இந்த பருவத்தில் ஹசார்ட் போட்டிருக்கும் 14 ஆவது கோலாகும். இரண்டாம் பாதி ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் விக்டர் மோசஸ், கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். 71 ஆவது நிமிடத்தில் மீண்டும் ஹசார்ட் போட்ட கோல், செல்சியின் வெற்றியை உறுதி செய்தது.

           

   

  பின்செல்