ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  உக்ரேனுடன் நட்புமுறை ஆட்டத்தில் பங்கேற்கிறது மலேசியா!

  உக்ரேனுடன் நட்புமுறை ஆட்டத்தில் பங்கேற்கிறது மலேசியா!

  13/02/2018

  img img

  கோலாலம்பூர், பிப்.14: தேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயா, ஐரோப்பாவின் உக்ரேனுடன் நட்புமுறை ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

  மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், மலேசியாவுக்கான உக்ரேனிய தூதர் ஒலெக்சாண்டர் நெச்டாய்லோவை சந்தித்தப் பின்னர் இதனை உறுதிப்படுத்தினார்.

  கால்பந்து விளையாட்டில் உக்ரேன், மலேசியா குறித்த ஒத்துழைப்பு குறித்து இருவரும் கலந்து பேசினர். இதில் மலேசியா, உக்ரேனுக்கு இடையில் ஏ தரத்திலான நட்புமுறை ஆட்டம் நடத்துவது குறித்தும் பேசப்பட்டது.

  உலகத் தரவரிசையில் உக்ரேன் தற்போது 35 ஆவது இடத்தில் உள்ளது. 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கெடுத்துள்ளது.  அதேவேளையில் 2012, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ண கால்பந்துப் போட்டிகளிலும் உக்ரேன் கலந்து கொண்டுள்ளது.

   

  பின்செல்