ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ரோட்டர்டாம் பொது டென்னிஸ்: வரலாறு படைக்கும் வாய்ப்பில் ஃபெடரர்

  ரோட்டர்டாம் பொது டென்னிஸ்: வரலாறு படைக்கும் வாய்ப்பில் ஃபெடரர்

  12/02/2018

  img img

  ரோட்டர்டாம், பிப்.13:

  நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் பொது டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பங்கேற்கிறார்.

  சமீபத்தில் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற ஃபெடரர் தற்போது உலகின் 2-ஆம் நிலை வீரராக உள்ளார். இந்தப் போட்டியில் ஃபெடரர் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாலே, நடாலை பின்னுக்குத்தள்ளி தரவரிசையில் முதலிடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதன்மூலம், ஏடிபி வரலாற்றில் தரவரிசையில் முதலிடம் பிடித்த அதிக வயதான நபர் (36) என்ற பெருமையை அவர் பெறுவார். இதுவரை, அமெரிக்காவின் ஆன்ட்ரே அகசி 2003-ஆம் ஆண்டு தனது 33-ஆவது வயதில் உலகின் முதல்நிலை வீரராக வந்ததே அதிகபட்சமாக உள்ளது.

  கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ரோட்டர்டாம் ஓபனில் பங்கேற்றிருந்த ஃபெடரர், முன்பு 2012, 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தப் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ளார். இந்நிலையில், இந்த பருவத்தில் அவர் தனது முதல் சுற்றில், தகுதிச்சுற்று வீரரான பெல்ஜியத்தின் ரூபன் பெமல்மன்ஸை சந்திக்கிறார்.

   

  இப்போட்டியில் ஃபெடரர் தனது காலிறுதியில் சக நாட்டவரும், உலகின் 15-ஆம் நிலை வீரருமான ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

  பின்செல்