ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பிரீமியர் லீக்: நியூகாசல் யுனைடெட் அணியிடம் வீழ்ந்தது மென்செஸ்டர் யுனைடெட்

  பிரீமியர் லீக்: நியூகாசல் யுனைடெட் அணியிடம் வீழ்ந்தது மென்செஸ்டர் யுனைடெட்

  12/02/2018

  img img

  லண்டன், பிப்.13: இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட்  0 - 1 என்ற கோலில் நியூகாசல் யுனைடெட்டிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று பிரீமியர் லீக் ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் இரண்டாவது முறையாக தோல்வி கண்டுள்ளது.

  இதனால் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் 16 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. அதேவேளையில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ, செயின் ஜேம்ஸ் பார்க் அரங்கில் மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார்.

  இதுவரை அந்த அரங்கத்தில் ஜோசே மொரின்ஹோ கொண்டு சென்ற எந்த ஓர் அணியும் வெற்றியைப் பதிவு செய்ததில்லை. நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிராக மென்செஸ்டர் யுனைடெட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியது.

   

  அதற்கு மென்செஸ்டர் யுனைடெட் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிட்டது. 65 ஆவது நிமிடத்தில் மாட் ரிட்சி போட்ட கோல், நியூகாசல் யுனைடெட்டின் வெற்றியை உறுதி செய்தது.

  பின்செல்