ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சிவராத்திரியின் மகிமை

  சிவராத்திரியின் மகிமை

  12/02/2018

  img img

  சிவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகவே கருதப்படுகின்றது. ராத்திரி என்ற வார்த்தை தினமும் வந்து போய்க் கொண்டிருக்கின்ற இரவைக் குறிப்பதல்ல. மாசி மாதம் கடைசி இரவு நேரம். இந்த கடும் இரவுக் காலத்தில்தான் சிவராத்திரி தினம் வருகிறது.

  இக்காலத்தில் சிவராத்திரி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு காரணம் உலகம் முழுவதும் அஞ்ஞான இருள் சூழ்ந்து மனித இனம் முழுவதும் அமைதியையும் சந்தோஷத்தையும் இழந்து ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

  இத்தகைய ஒரு சமயத்தில்தான், சிவபரமாத்மா அனைவரையும் அறியாமை என்ற அந்த இருளிலிருந்து மீட்கவே இப்பூமியில் அவதரிக்கின்றார். ஆகவே, நாம் அனைவரும் மிக ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாட வேண்டும். பிறந்த தினம் கொண்டாடும் நாளில் பொதுவாக அன்பளிப்பு வழங்கும் வழக்கம் உள்ளதல்லவா? அப்படியானால், சிவபரமாத்மாவின் தெய்வீக பிறந்த நாளான சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு என்ன அன்பளிப்பை தரப் போகிறோம்.

  சிவலிங்கத்தின் மீது எருக்கம் பூ வைத்துதான் படைக்கிறோம். உபகாரியான சிவபரமாத்மா மனித ஆத்மாக்களின் நன்மையின் பொருட்டு, ஆலகால விஷம் அருந்தினார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் நாமும் கூட வாழ்க்கையில் துக்கம், அசாந்திக்குக் காரணமாக இருக்கின்றன. காமம், கோபம், பேராசை, அகம்பாவம், பற்று ஆகிய 5 விகாரங்கள் ஆகிய ஆலகால விஷத்தை மீண்டும் இந்த நாளில், இப்போது சிவபரமாத்மாவிடம் அர்ப்பணிக்க வேண்டும்.

  இதனை உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் சம்பூரண தூய்மை, சுகம், சாந்தி, சந்தோஷம் போன்ற தெய்வீக குணங்கள் நமக்குள் உயிரோட்டம் பெறும். இதன்மூலம், மனதில் எழும் நல்ல, நேர்மறையான அதிர்வுகள் எதிர்மறையான அதிர்வுகளை அழிப்பதோடு அல்லாமல் நாம் சக்திகளின் சொரூபமாக மாற்றமடைவோம்.

  அதேவேளை நமது சக்திகளை சரியான நேரத்தில் உபயோகித்து நல்ல அனுபவங்களை அடைய முடியும். இதோடு, ஆன்மீக அனுபவசாலிகளாகி சூழ்நிலைகளாலும் பிறரது வசமாகி காரியங்களை செய்ய மாட்டோம். இவ்வுலகில் ஒவ்வொரு வினாடியும் இறுதி வினாடி என்ற நினைவின் ஆதாரத்தில் சதா ஆன்மீக முயற்சியிலேயே ஈடுபடமுடியும்.

  நாம் எல்லா சூழ்நிலைகளிலும் தைரியத்தோடு அடியெடுத்து வைக்கும்போது பரமாத்மா பரம்பொருளின் உதவி தானாகவே நம்மை வந்தடையும். இறைவன் சிவன் அன்புக் கடல், அந்தக் கடலில் சதா மூழ்கி இருப்பதன் மூலம் நாம் அவரது பாதுகாப்பு குடையின் கீழ் ஆரோக்கியமாகவும், நற்குணங்கள் என்ற செல்வங்கள் நிறைந்தவர்களாகவும், சந்தோஷமானவர்களாகவும் வாழலாம். இந்தக் கருப்பொருளை மனதில் நிலைநிறுத்தி சிவராத்திரி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வோம்.

  பி.கு.வரதராஜு கோபால்

   

  மலேசிய பிரம்மா குமாரிகள் இயக்கம்

  பின்செல்