ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  தேக்குவாண்டோ, பாரம் தூக்குதல், சேப்பாக் தக்ராவ்: தேசிய விளையாட்டு மன்றத்தின் முடிவில் மாற்றமில்லை

  தேக்குவாண்டோ, பாரம் தூக்குதல், சேப்பாக் தக்ராவ்: தேசிய விளையாட்டு மன்றத்தின் முடிவில் மாற்றமில்லை

  12/02/2018

  img img

  போர்ட்டிக்சன், பிப்.12:

  இவ்வாண்டு சுக்மா விளையாட்டில் இணைக்கப்பட்டுள்ள 3 விளையாட்டுகள் தேசிய விளையாட்டு மன்றத்தின் கட்டாய விளையாட்டுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது உறுதி என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

  தேக்குவாண்டோ, பாரம் தூக்குதல், சேப்பாக் தக்ராவ் ஆகிய விளையாட்டுகளை சுக்மாவில் இணைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதால், தேசிய விளையாட்டு மன்றம் ஒப்புதல் அளித்தது. இருந்த போதிலும், அந்த விளையாட்டு மன்றத்தின் கட்டாய விளையாட்டுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை.

  சுக்மாவில் இணைக்கப்பட்டுள்ள இந்த மூன்று விளையாட்டுக்கும் ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை. விளையாட்டு நிர்வாகத்தையும் அதற்கான தொகையையும் சுக்மா ஏற்பாட்டாளர்களே நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  தேக்குவாண்டோ போட்டியில், மலேசிய தேக்குவாண்டோ சங்க உறுப்பினர்கள் அன்றி பிறருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பாரம் தூக்கும் போட்டியில் ஊக்கமருந்து பிரச்சினைகள் எழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மறுபடியும் இதில் ஊக்கமருந்து சிக்கல் ஏற்பட்டால், அமைச்சு ஒருபோதும் அனுசரித்து போகாது எனவும் அவர் சொன்னார்.

  மலேசிய சேப்பாக் தக்ராவ் சங்கம் அமைச்சுடன் சந்திப்பு நடத்தி, அதன் நிர்வாகத்தை மறுசீரமைக்க ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

   

  பின்செல்