ஃப்ளாஷ் நியூஸ்

    nwsId

    அமெரிக்காவில் ஓட்டல் அறைகளில் பணிபுரியும் ரோபோ

    அமெரிக்காவில் ஓட்டல் அறைகளில் பணிபுரியும் ரோபோ

    12/02/2018

    img img

    லாஸ்ஏஞ்சல்ஸ், பிப்.12:

    ரோபோ’ எனும் எந்திர மனிதனின் சேவை தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஓட்டல்களிலும் அவற்றின் சேவை தொடங்கி விட்டது.

    குறிப்பாக அமெரிக்காவில் உள்ள ஓட்டல் அறைகளில் இவை பணியாற்றி வருகின்றன. அங்கு முதன் முறையாக சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள அலோப்ட் குபர்டினோ ஓட்டலில் 3 அடி உயர தானியங்கி ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.

    சுமார் 40 கிலோ எடையுள்ள போட்லர் என்ற ரோபோ பல விதமான உணர்வுகள் கொண்டது. ‘3டி’ காமிராக்கள் மற்றும் ‘வை-பை’ வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஓட்டலில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் பாட்டில், மைக்ரோவேவ் பாப்கான், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி பணிபுரிகின்றன.

    இதை பல ஓட்டல்களும் பின்பற்ற தொடங்கி விட்டன. ஓட்டல் லாஸ்ஏஞ்சல்ஸ்சில் ‘ஹன்னா’ என பெயரிடப்பட்ட ‘ரோபோ’ பணியாற்றி வருகிறது. அறைகளில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. 2.7 கி. மீட்டர் வேகத்தில் நடந்து சென்று அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு சேவை செய்கிறது.

    தி ஷெராடன்’ லாஸ்ஏஞ்சல்ஸ்கான் கேபிரியல் என்ற ஓட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது. இங்கு 8 ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது. அதில் ஒரு ரோபோ முதல் மாடியில் அறைகளில் தங்கும் விருந்தினர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். மீதமுள்ள 7 ரோபோக்கள் அறைகளுக்கு சென்று பணிபுரியும்.

     

    இதுபோன்று நிவேடா, லாஸ்வேகாஸ் உள்ளிட்ட நகரங்களில் ஓட்டல் அறைகளில் பலவிதமான ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

    பின்செல்