ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  புகைப்பட கலைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை

  புகைப்பட கலைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை

  12/02/2018

  img img

  பாமிம் எனப்படும் மலேசிய இந்திய ஊடக நிபுணத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படக் கலைஞர்கள், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கான பயிற்சி நடைபெறவிருக்கிறது.

  இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதன் மூலம் டிஜிட்டல் புகைப்படக் கலை, கேமராவின் அம்சங்கள், கேமராவின் லென்ஸ், ஸ்பீட்லைட் (ஃபிலேஷ்) குறித்த விளக்கங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுக்கும் நுட்பங்கள், திறன், குறிப்பு ஆகியவை குறித்து திறன்பட அறிந்து கொள்ளலாம்.

  இந்தப் பயிற்சிப் பட்டறை பிப்ரவரி 24ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரையில் ஜாலான் ஈப்போ, முத்தியாரா காம்பிளெக்ஸ்சில் நடைபெறவிருக்கின்றது.

  புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்கள், அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கலாம்.

   

  இந்தப் பயிற்சிப் பட்டறை முழுவதும் தமிழில் வழிநடத்தப்படுகின்றது. எனவே, முன்பதிவுக்கு உடனே குமாரி குசேலா 012-2500025, சுந்தர் 012-2921818 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். சொந்த புகைப்பட கருவி வைத்திருப்பவர்கள் உடன் கொண்டு வரலாம். பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்

  பின்செல்