ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மலேசியரைக் கவர்ந்த இசைமைப்பாளர்கள் யார்

  மலேசியரைக் கவர்ந்த இசைமைப்பாளர்கள் யார்

  09/02/2018

  img img

  ஒவ்வொரு வாரமும் மலேசியர்களைக் கவர்ந்த கலைஞர்களைப் பற்றி நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த வாரம் நம் நாட்டில் இருக்கும் இசையமைப்பாளர்களைத் தெரிந்து கொள்ளலாமா?

  மலேசியத் தமிழ் இசைத்துறை அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. பல பாடல்கள் அனைத்துலக ரீதியில் அதிகமாக பேசப்பட்டுள்ளன. அவற்றில் “என்னைக் கொல்லாதே” பாடல் YOU TUBE-இல் 11 மில்லியன் ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்துள்ளனர்.

  எத்தனை பேருக்கு “உயிரை தொலைத்தேன்” பாடல் பிடிக்கும்? மலேசியாவில் “wow” என்று அனைவரும் முணு முணுக்கும் பாடலாக இன்று வரை அமைந்துள்ளது. புனிதா ராஜாவின் “தப்பா பேசாதே”, “பாதி நிலவு”, “சுகூட்டர் வண்டி”, “அக்கா மக..” போன்ற பல பாடல்கள் நம் நாட்டின் இசைத்துறையை வளர்ச்சியடைய வைத்துள்ளன. இதற்குக் காரணம் நம் நாட்டில் இருக்கும் இசையமைப்பாளர்களே. அதில் மலேசியர்களைக் கவர்ந்த இசைமைப்பாளர்கள் யார்?

  இசையமைப்பாளர்களில் ஜேய், ஸிதிஷ், தீபன், வர்மன் இளங்கோவன், சுந்தரா, திலிப் வர்மன், பாய் ரெட்ஜ், சுரேஷ் ரோகன் ஆகியோர் மலேசியர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர்களாக இருக்கின்றனர்.

  ஒரு பாடல் வெற்றி பெற பாடகர்கள் மட்டும் காரணமல்லர், மாறாக அதன் வெற்றி அப்பாடலின் இசைமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் பொருந்தும். அனைத்துலக ரீதியில் பல வித்தியாசமான படைப்புகளை பாடலின் வழி வழங்கிக்கொண்டிருக்கும் நம் நாட்டின் இசையமைப்பாளர்களுக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

   

  பின்செல்