ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  08/02/2018

  img img

  கலிபோர்னியா, பிப்.8:

  கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் புதிய ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவை உலகத்தரத்தில் உயர்த்தியதில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்து உள்ளது.

  உலகின் மிக சக்தி வாய்ந்த அதிக வேகத்தில் செல்லும் புதிய ரக ஃபெல்கான் ராக்கெட்டை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. ராக்கெட்டில் உள்ள மூன்று உயர்த்திகளில் மொத்தம் 27 என்ஜின்கள் உள்ளன. இந்த என்ஜின்கள் அனைத்தும் மொத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

  இந்த ராக்கெட் மற்ற ராக்கெட்டுகளை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அது 1 லட்சத்து 40 ஆயிரம் பவுண்ட் எடையுடன் பூமி வட்டப்பாதையைச் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிரகத்திற்கு 40 ஆயிரம் பவுண்ட் எடையுடன் சுற்றி வரும் திறன் கொண்டது.

  இந்நிலையில், நேற்று ஃபெல்கான் ராக்கெட்டை புளோரிடா கடல் பகுதியில் உள்ள விண்வெளிதளத்தில் இருந்து விண்ணிற்கு வெற்றிகரமாக செலுத்தினர். பெரும் புகையுடன் சென்ற ராக்கெட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். தற்சமயம் ராக்கெட் பூமி வட்டப்பாதையில் வெற்றிகரமாக சுற்றி வருகிறது. ஃபெல்கான் ராக்கெட் போன்று மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் வரிசையாக வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  பின்செல்