ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மே மாதத்தில் வெடிகுண்டு பசங்க

  மே மாதத்தில் வெடிகுண்டு பசங்க

  02/02/2018

  img img

  “விளையாட்டுப் பசங்க”, “வெட்டிப் பசங்க”. “வேற வழி இல்லை” போன்ற வெற்றித் திடைப்படங்களைத் தயாரித்த Veedu Production-இன் அடுத்த வெளியீடாக வருகிறது “வெடிகுண்டு பசங்க”. 

  டெனிஸ் குமார், மலேசியர்களுக்கு அதிகமாக பிடித்த கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். அதனால், இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சங்கீதா கிருஷ்ணசாமி, சீலன், பிரகாஸ், “விழுதுகள்” ரேவதி, “விகடகவி” மகேன், குபேன் உட்பட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, மே மாதத்தில் வெளியீடு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக டேனிஸ் தெரிவித்தார்.

  டாக்டர் விமலா பெருமாள், தமது “முனைவர்” பட்டத்தைப் பெற்று இயக்கும் முதல் திரைப்படமாக இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மாசானக் காளி உறுமி மேளக் குழுவினரும் நடித்துள்ளனர். அதோடு, இந்தக் குழுவோடு தாம் உறுமி மேள பயிற்சிகளை ஒரு மாத காலமாக மேற்கொண்டதாக டேனிஸ் தெரிவித்தார். திரைப்படத்தில் டேனிஸ் உறுமி வாசிக்கும் கலைஞராக இருப்பாரோ? பார்க்கலாம்…..

  நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில், இந்தியாவைச் சேர்ந்த விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். அண்மையில் படத்தில் இடம்பெற்றுள்ள “வாட விளையாடு” பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பாலன் கேஸ்மிர், அந்தோணி தாசன் பாடியுள்ள பாடலை, இதுவரை 390 000 மேற்பட்ட ரசிகர்கள் “You Tube” இல் கேட்டுள்ளனர். அடுத்து நாங்கள் அறிமுகம் செய்யும் இரண்டாவது பாடலில் மலேசியப் பாடகரும், இந்தியப் பாடகரும் பாடியிருப்பதாக டேனிஸ் தெரிவித்தார். 

  இத்திரைப்படத்திற்கு மற்றுமொரு எதிர்பார்ப்பும் இருக்கின்றது. நாட்டின் சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை கடந்த வருடம் பெற்றவர் சங்கீதா கிருஷ்ணசாமி. அவர் நடித்த திரைப்படங்களில் வெளிவரும் முதல் திரைப்படமாக “வெடிகுண்டு பசங்க” இருக்கும் என்பதுதான் இதற்குக் காரணம். திரைப்படத் துறையில் அதிக வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் சங்கீதா, “வெடிகுண்டு பசங்க” படத்தில் எப்படி நடித்துள்ளார்? அதையும் பார்க்கலாம்….

  இத்திரைப்படத்தை இந்தியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் வெளியீடு செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. “வெடிகுண்டு பசங்க” : திரையரங்குகளை அதிர வைக்குமா?

   

   

  பின்செல்