ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஶ்ரீராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தில் பட்டாபிஷேக பூஜை

  ஶ்ரீராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தில் பட்டாபிஷேக பூஜை

  02/02/2018

  img img

  மகான் ஶ்ரீராகவேந்திரா சுவாமிக்கு பட்டாபிஷேக பூஜையும் ஶ்ரீராகவேந்திர ஜெயந்தி விழாவும் புக்கிட் பெருந்தோங் வட்டாரத்தில் உள்ள சத்குரு ஶ்ரீராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெறவுள்ளது. எண் - ஜி7, ஜாலான் தெரொம்பட் 12, புக்கிட் பெருந்தோங் என்ற முகவரியில் அமைந்துள்ள ஆலயத்தில் வரும் 17.2.2018 சனிக்கிழமை பட்டாபிஷேக பூஜையும் 22.2.2018 வியாழக்கிழமை ஶ்ரீராகவேந்திரா ஜெயந்தி விழாவும் நடைபெறவிருப்பதால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து மகான் சத்குரு ஶ்ரீராகவேந்திரரின் அருள் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

  இதனிடையே நாளை 26.1.2018 வெள்ளிக்கிழமை ஜகத்குரு ஶ்ரீமன் மத்வஷரிய சுவாமிக்கு மத்வ நவமி நடைபெறவிருப்பதால் பக்த கோடி பெருமக்கள் அனைவரும் திரளாக வந்து ஜகத்குரு ஶ்ரீமன் மத்வஷரியாவின் ஆசிகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

  தொடர்புக்கு : விஜயகுமாருடன் 017-6414650.

   

  பின்செல்