புக்கிட் பிளிம்பிங் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா

புக்கிட்  பிளிம்பிங்  ஸ்ரீ  சுப்பிரமணியர்  சுவாமி  ஆலயத்தில்  தைப்பூச  திருவிழா

31/01/2018

img img

கோலசிலாங்கூர் புக்கிட் பிளிம்பிங் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் இன்று 31.1.2018 புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்படவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்தது. முன்னதாக கடந்த  21.1.2018 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு கொடியேற்றம், காப்புக் கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து 30.1.2018 செவ்வாய்க்கிழமை வரை சுற்று வட்டார அன்பர்களின் உபயங்கள் நடைபெறும். 30.1.2018 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் பக்தர்கள் பால் குடம் ஏந்தி ஆலயம் வந்தடைந்தவுடன் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறும். 31.1.2018 புதன்கிழமை தைப்பூச மகோற்சவம். காலை 6.00 மணிக்கு மகா ஹோமம், காலை 8.00 மணிக்கு பால் குட ஊர்வலம் நடைபெறும். நண்பகல் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். பிற்பகல் 1.00 மணிக்கு மேல் தீமிதி உற்சவம் நடைபெறும்.

நாளை 1.2.2018 வியாழக்கிழமை ஸ்ரீ முருகப் பெருமான் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு சுற்று வட்டாரப் பக்தர்களுக்கு காட்சி அளித்து அவர்களின் காணிக்கையை ஏற்று அருள் பாலித்து மீண்டும் ஆலயம் வந்தமர்வார். மறுநாள் 2.2.2018 இரவு 7.30 மணிக்கு மேல் இடும்பன் பூஜை நடைபெறும். காவடி மற்றும் பால்குடம் பக்தர்கள் நமது பாரம்பரிய உடைகள் அணிந்து நேர்த்தியான முறையில் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துமாறு பக்தர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்துகிறது. ஆகவே, இவ்வாலய தைப்பூச திருவிழா சிறப்புடன் நடைபெற பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு எம்பெருமான் முருகனின் அருட்கடாட்சம் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

பின்செல்