ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சி.குமரேசனின் புதிய திரைப்படம்

  சி.குமரேசனின் புதிய திரைப்படம்

  19/01/2018

  img img

  'மைந்தன்', 'மயங்காதே' போன்ற வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த சி.குமரேசன், தனது அடுத்த திரைப்படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நாட்டில் நம்பிக்கை நட்சத்திரமாகவும்,  இயக்குனராகவும் இருப்பவர் குமரேசன். நிணிஸிகிரி ரிபிகிஷி தொலைக்காட்சி தொடரில் காவல் துறை அதிகாரியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

  'வைரா' எனப் பெயரிடப்ப ட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தில் நடித்திருக்கும் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 'மைந்தன்', 'மயங்காதே' ஆகிய திரைப்படங்களில் இரண்டு கதாநாயகிகள் இடம்பெற்றிருந்தனர். 'வைரா' திரைப்படத்திலும் இரண்டு கதாநாயகிகளா? அல்லது புதிய கதாநாயகிக்கு வாய்ப்பு கொடுப்பட்டுள்ளதா? இக்கேள்விக்கான பதிலை விரைவில் எதிர்பார்ப்போம். 

  குமரேசனின் திரைப்படம் என்றாலே, நாட்டில் முன்னணியில் இருக்கும் கலைஞர்கள் நடிப்பது வழக்கம். அதே போன்று நமக்கு பரிட்சியமான முகங்கள் நடித்திருக்கின்றனரா என்பதை காத்திருந்துப் பார்ப்போம். வாழ்த்துகள் சி.கே!

  பின்செல்