பாறைகள் நகரும் மர்மம்!

பாறைகள் நகரும் மர்மம்!

27/11/2017

img img

கலிஃபோர்னியாவின் மரணப் பள்ளத்தாக்குத் தேசியப் பூங்காவில், ‘ரேஸ்ட்ராக் ப்ளாயா’ என்கிற உலர்ந்த ஏரி இருக்கிறது. இந்தப் பகுதியில் கிடக்கும் கற்கள், மனிதரோ, விலங்கோ நகர்த்தாமல் தாமாகவே நகர்கின்றன என்கிறார்கள். இங்கே கிடக்கும் நூற்றுக்கணக்கான கற்களை ஒட்டியும், அவை நகர்ந்ததற்கான தடங்கள் நடைபாதைகள்போல தெரிகின்றனவாம். கற்கள் என்றால் கூழாங்கல் அளவிலிருந்து அரை டன் எடையுள்ள பெரிய பாறைகள் வரை அடங்கும். அவை நகர்ந்த தூரங்களும் வெவ்வேறு அளவில் உள்ளன. சில கற்கள், சில அடி தூரம் நகர்ந்திருக்கின்றன. 

வேறு சில, நூறடி தூரம்கூட நகர்ந்துள்ளதாம். பெருமழைக் காலத்தில், இந்த உலர்ந்த ஏரி நீரால் நிரம்புமாம். பனிக்காலத்தில் உறைந்துவிடுமாம். இந்த மாற்றங்களால் கற்கள் நகரக்கூடும் என்று அனுமானிக்கிறார்கள். ஆனாலும், யாராலும் கற்கள் நகரும் காரணத்தை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

பின்செல்