அரசாங்கத்தின் மீது பற்றோடு இருப்பீர்!

அரசாங்கத்தின் மீது பற்றோடு இருப்பீர்!

21/04/2017

img img

ஆயர் குரோ, ஏப். 22: மலேசியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க அரசாங்கம் முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாக செய்து முடிக்க அரசு ஊழியர்களின் பற்றுறுதி மிக அவசியம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார். 

மக்கள் தேர்வு செய்த அரசாங்கத்திற்கு நேர்மையாக இருப்பதோடு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் வாக்குறுதியும் கூட. எனவே, நடைமுறை அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து ஒரு குடும்பமாக ஓர் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றார். 

"ஒருவர் ஒருவருக்கிடையே பிரச்சினைகளை மூட்டும் குணத்தைத் தகர்த்தெறிய வேண்டும். துன் முதாஹிர், துன் பேரா குடும்பத்தினரிடையே நிகழ்ந்த பிரச்சினையால் மலாக்கா ஆட்சியாளர்களின் அரசாட்சியே சரிந்த வரலாறு கற்பித்த பாடத்தை நினைவில் கொண்டு ஒற்றுமையாக செயல்படுவோம்" என்று பிரதமர் நஜிப் கேட்டுக் கொண்டார். 

நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது. எனினும், அரசு ஊழியர்கள் சிறந்த முறையில் இத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் வெற்றி கண்டிட முடியாது என அவர் சொன்னார். 

ஆகையால்தான் அரசாங்கத்தின் ஒவ்வொரு பெருந்திட்டத்தையும் மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. அப்படி முறையாக சென்றடையும் தகவல்களே நடப்பு அரசாங்கத்தின் செயல்முறைக்கும் ஆற்றலுக்குமான அறிக்கையாக அமையும் என்றார்.  

 

பின்செல்