ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  டிஎன்50: 585,000 இளைஞர்களை எட்டிவிட்டது!

  டிஎன்50: 585,000 இளைஞர்களை எட்டிவிட்டது!

  21/04/2017

  img img

  புத்ராஜெயா, ஏப். 22: தேசிய உருமாற்றத் திட்டம் 2050-இன் (டிஎன்50) முதல் கட்ட கலந்துரையாடலில் 585,000 இளைஞர்களை எட்டியுள்ளதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.  

  அவ்வகையில் நேரடி கலந்துரையாடல், இணையத்தின் வழி மேற்கொள்ளப்பட்ட கருத்து பரிமாற்றங்களின் வழி சுமார் 26,000 பேரின் கருத்துகள் டிஎன்50இன் இலக்குக்கு வரவேற்கத்தக்கனவாக உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 15 லட்சம் இளைஞர்கள் இக்கருத்து களத்தின் வழி அணுகப்படுவர் என அவர் சொன்னார்.  

  தற்போது, டிஎன்50இன் இரண்டாம் கட்ட கலந்துரையாடல் தொடங்கப்படவுள்ளது. இது இவ்வாண்டு இறுதி வரை நீடிக்கும். இந்த இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இளைஞர்களின் கருத்துகளை அவர்கள் இன்னும் ஆழமான முறையில் விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் அக்கருத்துகள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு டிஎன்50இன் கொள்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்படும்.     

  இந்தக் கருத்துகளை ஆய்வு செய்ய சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும். தலைப்பு வாரியாக வரிசைப்படுத்தப்பட்ட கருத்துகளை பகுத்தறிய 10 இளைஞர்கள், அத்தலைப்பு சம்பந்தப்பட்ட துறையிலிருந்து 3 நிபுணர்கள் ஆகியோரை உட்படுத்தி இந்தக் குழு உருவாக்கப்படும்.

  எனவே, இக்குழுவின் அங்கத்தினராக இடம் பெற விருப்பமுள்ளோர் தன்னார்வ முறையில் தங்கள் பெயர்களை விண்ணப்பிக்கலாம். டிஎன்50இன் எதிர்கால இளைஞர் குழு உறுப்பினர் களாக இணைய எண்ணம் கொண்டுள்ளோர் www.mytn50.com/circles/registration என்ற அகப்பக்கத்தின் வழி விண்ணப்பிக்கலாம். 

   

  பின்செல்