ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  குறைந்த வாழ்க்கை செலவினம் கொண்ட நாடாக ஆசியானில் மலேசியா முன்னிலை

  குறைந்த வாழ்க்கை செலவினம் கொண்ட நாடாக ஆசியானில் மலேசியா முன்னிலை

  21/04/2017

  img img

  கோலாலம்பூர், ஏப்.22: ஆசியானில் குறைந்த வாழ்க்கை செலவினங்களைக் கொண்ட நாடாக மலேசியா திகழ்ந்தாலும், பொருட்களின் விலையைக் குறைக்கவும், இந்நாட்டை உயர் வருமானம் பெறும் நாடாக உயர்த்தவும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகின்றது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். 

  அமெரிக்காவின் பொருளாதார உளவு பிரிவு மேற்கொண்ட ஆய்வில் நாடு தழுவிய நிலையில் 133 மாநகரங்களின் பொருள், சேவை விலைகள் ஒப்பிடப்பட்டன. அவற்றில் மலேசிய அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள் பலனளிப்பவையாக இருப்பது தெரிய வந்துள்ளது. 

  உயர் வருமானம் பெறும் நாடாக மலேசியாவை உயர்த்தும் முயற்சியில், வாழ்க்கை செலவினங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. ஆகையால், பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. அவற்றில், விலை கட்டுப்பாடு சட்டம், பிரிம் உதவித் தொகை, இடைத்தரகர்கள் இல்லாத வணிக நடவடிக்கை போன்றவை குறிப்பிடத்தக்கன என அவர் தமது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்நிய நாட்டின் அங்கீகாரத்தால், பொருட்களின் விலையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தீர்க்கப்பட்டு விட்டது என கூறிவிட முடியாது, வருமானத்தை அதிகப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் இன்னும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

  மேலும், ஒரே மலேசியா கடை, ஒரே மலேசியா வீடமைப்புத் திட்டம், ஒரே மலேசியா கிளினிக், ஒரே மலேசியா புத்தக பற்றுச் சீட்டு போன்ற திட்டங்களும் செலவுகளைக் கட்டுப்படுத்தவே அறிமுகமாகின. 

  பிரதமராக தாம் அறிமுகப்படுத்திய இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என நம்புவதாக டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்தார்.

  பின்செல்