மைகார்ட் தொலைப்பவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு!

மைகார்ட் தொலைப்பவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு!
img img

கோலாலம்பூர், ஏப்.22: காணாமல் போகும் மைகார்ட்டிற்குப் பதிலாக புதிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான அபராதம் அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் பல தரப்பினரிடையே அதிருப்தி நிலவி வருகிறது. 

இந்நிலையில், மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் புதிய அணுகுமுறைதான் இது என உள்துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் கூறினார். 

அலட்சியத்தினால் மைகார்ட்டை தொலைத்தவர்களுக்கு முதல் கட்டமாக 100 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாம் முறை தொலைப்பவர்களுக்கு இதற்கு முன் 200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட வேளையில், தற்போது அது 300 வெள்ளியாக  உயர்த்தப்பட்டிருக்கிறது.

மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் அடையாள அட்டையைத் தொலைப்பவர்களுக்கு இதற்கு முன் 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் அது ஆயிரம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது.

பின்செல்