வெனிசுலா மகப்பேறு மருத்துவமனை மீது ஆயுதக் குழுவினர் கொடூர தாக்குதல்

வெனிசுலா மகப்பேறு மருத்துவமனை மீது  ஆயுதக் குழுவினர் கொடூர தாக்குதல்
img img

கரகஸ், ஏப்.22: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை ஆட்சிப் பொறுப்பில் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகப்பேறு மருத்துவமனை மீது நேற்று ஆயுதக் குழுவினர் கொடூர தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கிருந்த 54 குழந்தைகள் உள்ளிட்ட தாய்மார்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக வெனிசுலா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டெல்சி ரோட்ரிகஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வெனிசுலா நாட்டில் உள்ள எந்த இடத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. உயிர் பலி ஏதும் உண்டா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பின்செல்