ஃப்ளாஷ் நியூஸ்

    சீனாவின் முதல் சரக்கு விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

    சீனாவின் முதல் சரக்கு விண்கலம்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
    img img

    பெய்ஜிங், ஏப்.22: விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013ஆம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

    இந்நிலையில், இந்த ஆய்வு நிலையத்துக்கு தேவையான பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக சரக்கு விண்கலம் ஒன்றை சீனா தயாரித்தது. ’டியான்ஸோ-1’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், திரவ நிலையில் இருக்கும் பிராண வாயு, மண்ணெண்ணெயினால் இயங்கும் ராக்கெட் மூலம் விண்ணில்செலுத்தப்பட்டது. 10.6 மீட்டர் நீளத்தில் குழாய் வடிவில் உள்ள இந்த விண்கலம், செயற்கைக்கோள் உள்பட சுமார் 6 டன் எடையுள்ள சரக்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் செல்லும் ஆற்றல் கொண்டதாகும். மேலும், விண்வெளியில் தங்கிருக்கும்போது புவி ஈர்ப்பு விசையின் எதிர்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிநவீன சாதனங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

    சீனாவின் தென்பகுதியில் உள்ள ஹைனான் தீவில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7.41 மணியளவில் ’டியான்ஸோ-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது விண்வெளியில் சுற்றியவாறு பல்வேறு கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ’டியான்ஸோ-1’ விண்கலம் இணைக்கப்படும் என சீன விண்வெளித்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

    பின்செல்