ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் நோர்சா

  மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் நோர்சா

  21/04/2017

  img img

  புத்ராஜெயா, ஏப்.22: மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராக டத்தோ ஸ்ரீ நோர்சா சக்காரியா பொறுப்பேற்கவுள்ளார். அந்த சங்கத்தின் இடைக்கால தலைவர் டான்ஸ்ரீ அல் அமீனுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். 

  2017ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரைக்குமான தவணைக்கு, நோர்சா சக்காரியா மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகிப்பார்.  அதேவேளையில் டான்ஸ்ரீ அல் அமீன், மலேசிய பூப்பந்து சங்கத்தின் ஆலோசகராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  மலேசிய பூப்பந்து சங்கத்தின் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில் தலைவர் பதவிக்கான தேர்தல் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

  2013 ஆம் ஆண்டில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டான்ஸ்ரீ மஹாலீல் உடல் நலக் குறைவின் காரணமாக 2015 ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ அல் அமீனிடம் இடைக்காலத் தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார். 

  2016 ஆம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக் போட்டி வரை தலைவர் பதவியில் அல் அமீன் தொடர வேண்டும் என்றும், அதன் பின்னர் 2017ஆம் ஆண்டில் நோர்சாவிடம் தலைவர் பதவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் மஹாலீல் கேட்டுக் கொண்டிருந்தார்.எனினும் அல் அமீன் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் கொண்டதைத் தொடர்ந்து சங்கத்தில் புகைச்சல் ஏற்பட்டது. 

  மலேசிய பூப்பந்து சங்கத்தின் புரவலர் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்னிலையில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. 

   

  பின்செல்