ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி; உறுதிப்படுத்தியது அமெரிக்கா

  வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி; உறுதிப்படுத்தியது அமெரிக்கா

  17/04/2017

  img img

  சியோல், ஏப்.17:

  நேற்று காலை நடத்தப்பட்ட வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. இதைப்பற்றி மேற்கொண்டு ஆராய்ந்து வருவதாக தென் கொரியா தெரிவித்தது. இச்சோதனையின் தோல்வி தனது நிறுவுறுவான கிம் இல் சுங்கின் 105 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்ந்த மறுநாள் நடந்துள்ளது. கொண்டாட்டத்தில் தனது 60 ற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அணிவகுப்பில் இடம் பெறச் செய்தது வட கொரியா, இதில் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அடங்கும். 

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் எச்சரிக்கையை விடுக்கும் விதமாக விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொரிய தீபகற்பத்தில் கொண்டு நிறுத்தியுள்ளார். வட கொரியாவின் அண்டை நாடும், நட்பு நாடுமான சீனா அதன் அணு ஆயுத சோதனைகளையும், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் விருப்பத்தையும் தடுக்காவிட்டால் அமெரிக்காவே தன்னந்தனியாக வட கொரியா மீது நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். வட கொரியாவின் ஏவுகணைகள் அமெரிக்காவைத் தாக்கும் வல்லமையுடயவை என்று சொல்லப்படுகிறது. இதனால் எப்போதும் அமெரிக்க-வட கொரியப் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  இதுவரை வட கொரியா ஐந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. கடந்த வருடம் இரண்டு சோதனைகளை நடத்தியுள்ளது. ஆறாவது சோதனையை இப்போது நடத்த ஆயத்தங்களை செய்து வருவதாக செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டாண்டுகளில் அமெரிக்க கண்டத்தை அணு ஆயுத ஏவுகணைகளால் தாக்கக்கூடிய வலிமையை வட கொரியா பெற்றுவிடும் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  பின்செல்