கிம் ஜோங் நம் கொலை வழக்கில் முக்கிய புள்ளிக்கு தொடர்பு!

கிம் ஜோங் நம் கொலை வழக்கில் முக்கிய புள்ளிக்கு தொடர்பு!
img img

மலாக்கா, மார்ச் 20: கிம் ஜோங் நம் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களில் ஒரு முக்கிய புள்ளியும் சம்பந்தப்பட்டிருப்பதாக அரச மலேசிய போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார். 

அந்த முக்கியப் புள்ளி வட கொரியராக கூட இருக்கலாம். ஆனால், அவரின் பெயர் இப்போதைக்கு வெளியிடப்படாது. 

ஏற்கெனவே போலீசாரால் வலை வீசி தேடப்பட்டு வரும் 3 வட கொரியர்கள் தலைநகரில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் மறைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 

இந்த வழக்கோடு தொடர்புடைய இன்னும் சில முக்கிய நபர்களைப் போலீசார் இனங்கண்டுள்ளனர் என 210ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 

 

பின்செல்