ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஜேபிஏ உபகாரச் சம்பளம்: பழைய நிபந்தனையையே அமல்படுத்துங்கள்! சோங் சின் வூன் பரிந்துரை

  ஜேபிஏ உபகாரச் சம்பளம்: பழைய நிபந்தனையையே அமல்படுத்துங்கள்! சோங் சின் வூன் பரிந்துரை

  20/03/2017

  img img

  கோலாலம்பூர், மார்ச் 20: எஸ்பிஎம் மாணவர்களுக்கான பொதுச்சேவை துறையின் உபகாரச் சம்பளத் திட்டத்தின் (ஜேபிஏ) புதிய நிபந்தனைகள் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், பழைய நிபந்தனைகளையே அமல்படுத்த வேண்டும் என மசீச இளைஞர் அணி தலைவர் சோங் சின் வூன் பரிந்துரைத்தார். 

  முன்னதாக, 9ஏ+, அதற்கும் மேற்பட்ட தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதுஎஸ்பிஎம் தேர்வில் மாணவர்கள் எத்தனை பாடங்களை எடுக்கிறார்களோ அத்தனை பாடங்களிலும் ஏ+ பெற்றிருந்தால்தான், ஜேபிஏ உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என புதிய நிபந்தனைகளின் வழி தெரிவிக்கப் பட்டுள்ளது. 

  இதனால், தேர்வு அடைவுநிலை பாதிக்கப்பட்டு விடுமோ என பயந்து 9 காட்டாயப் பாடங்களைத் தவிர, இதர தேர்வு பாடங்களை மாணவர்கள் எடுக்காமல் போகும் தர்மசங்கட சூழ்நிலை அமையும்.

  உதாரணத்திற்கு சீனப் பாடம் கட்டாயப் பாடமல்ல. ஆகையால், அந்தப் பாடத்தில் ஏ+ எடுக்க முடியுமா என சந்தேகிக்கும் மாணவர்கள் ஓரிரு முறை சிந்திக்க நேரிடும். சிலர் அப்பாடத்தைத் தேர்வு செய்யாமல் போகும் நிலையும் ஏற்படலாம் சீன மொழி ஆசிரியர்களுக்கான 3 நாள் கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

  பின்செல்