ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஜிஞ்சாங் உத்தாரா ஸ்ரீ அமான் பிபிஆர் வீடுகள் 800 குடியிருப்பாளர்களுக்கு விற்பனை

  ஜிஞ்சாங் உத்தாரா ஸ்ரீ அமான் பிபிஆர் வீடுகள் 800 குடியிருப்பாளர்களுக்கு விற்பனை

  20/03/2017

  img img

  கோலாலம்பூர், மார்ச் 20: கெப்போங், ஜிஞ்சாங் உத்தாராவிலுள்ள ஸ்ரீ அமான் பிபிஆர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 1,000 பிபிஆர் வீடுகளை தகுதிப் பெற்ற அனைவருக்கும் விற்கவுள்ளதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிவித்துள்ளது. 

  வரையறுக்கப்பட்டிருக்கும் தகுதிகளுக்கு ஏற்ப ஜிஞ்சாங் உத்தாரா ரூமா பாஞ்சாங்கில் வசிக்கும் ஏறக்குறைய 800 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் விற்பனைக்கு விடப்படுகிறது என டிபிகேஎல் சமூக வீடமைப்பு, வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் முகமட் முஸமர் ஜமாலுடின் தெரிவித்தார். 

  தகுதி உள்ள குடியிருப்பாளர் களுக்கு வீடுகள் வழங்கப்படும் அதே வேளையில், மூதமுள்ள வீடுகளை சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுடன் உடனிருக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கு வீடுகள் விற்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக நேற்றுக் காலை பிபிஆர் ஸ்ரீ அமானில் நடைபெற்ற குடியிருப்பாளர்கள் விளக்கமளிப்பு கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

  பின்செல்